பல நாளாய் என்னுள் ஓர் ஆசை உண்டு ...
------------------------------------------------------
நள் இரவில் நிலவின் முகம் பார்த்து உன் கருவழகு கூந்தலின் நுனி எங்கே என்று வினவ..
பல நாளாய் என்னுள் ஓர் ஆசை உண்டு ...
சிறகடிக்கும் வண்ணத்து பூச்சியிடம் ..உன் சிறகின் வண்ணம் ஓர் நாள் நான் அணிய தவணையில் தாராயோ என்று வினவ...
பல நாளாய் என்னுள் ஓர் ஆசை உண்டு ...
சில்லென்று வீசும் பூங்கற்றிடம் ... என் செவி சாய்க்கும் மெல்லிசையை நீ யாரிடம் பயின்றயோ என்று வினவ
பல நாளாய் என்னுள் ஓர் ஆசை உண்டு ...
நீர் வாழும் முதலை கண்டு ..அன்பாய் அதனை முத்தமிட்டு ..இனி மானிடரும் மாமிசமும் விடுத்தது பச்சை பயிருண்டு வாழ்வையோ என்று வினவ...
பல நாளாய் என்னுள் ஓர் ஆசை உண்டு ...
No comments:
Post a Comment